ஏலகிரியில் கண்காணிப்பு அலுவலரின் ஆய்வு கூட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிமலை தந்தை பெரியார் அரங்கில் திருப்பத்தூர் மாவட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் போக்குவரத்து முதன்மை செயளர் T.S.ஜவகர் தலைமையில் நடைப்பெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர். விஜயகுமார் மற்றும் மருத்துவ துறை ஊரக துறை பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளரும் போக்குவரத்து ஆணையம் முதன்மை செயளர் டி.எஸ்.ஜவகர் தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டம் தொடங்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்குள்ளேயே அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளின் சிறப்பான பணியால் திருப்பத்தூர் மாவட்டம் பொங்கல் பரிசு தொகுப்பு பொது விநியோகம் திட்டத்தில் தமிழகத்திலே முதன்மை மாவட்டமாக 99.6%பெற்று முதலிடத்தில் பெற்றது.
இந்த நிலையில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றி வருவதால் தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழ்ந்து வருகின்றது.
கருத்துகள் இல்லை