• சற்று முன்

    திருவாடானை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகம் திறப்பு விழா


    திருவாடானை அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் மத்திய அரசின் திட்டமான அடல் டிங்கரிங் ஆய்வகம் இன்று புதன்கிழமை ரூ 20 லட்சம் செலவில் இன்று பள்ளியில் திறக்கப்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, திருவாடானையில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்கட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியில் ணமத்திய அரசின் திட்டமான அடல் டிங்கரிங் ஆய்வகம் இன்று புதன்கிழமை ரூ 20 லட்சம் செலவில் இன்று பள்ளியில் திறக்கப்பட்டது. இந்த விழாவிற்கு பள்ளி தலமை ஆசிரியர் கலா தமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி முன்னிலையில் திறந்து வைத்தார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தேவகோட்டை சேவகன் அண்ணாமலை கலை கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் சந்திரமோகன் கலந்து கொண்டார். இந்த அடல் டிங்கரிங் ஆய்வகம் திருவாடானை தாலுகாவில் முதக் முதலாக திறக்கப்படடுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வகம் நம் கிராமத்திற்கு தேவையானவற்றை அறிவியல் பூர்வமான தயார் செய்யவும் அதன் மூலம் அறிவியலை மாணவர்களுக்கு ஊக்கப்படுத்தவும் பயன்படும். இந்த ஆய்வகத்தில் ரூபாய் 80 ஆயிரம் செலவில் 3டி பிரின்டர் உள்ளது அதன் மூலம் உருவத்தையே பிரிண்ட் ஆக எடுக்கமுடியும்( சிலையாக )நமது உருவத்தையே சிலையாக பிரிண்ட் செய்ய முடியும். மாணவிகள் அறிவியல் பூர்வமாக சிந்தித்து அதை உயிரோட்டம் செய்ய ஏதுவாக இந்த ஆய்வகம் பயன்படும். தொலைநோக்கிகள் உள்ளது. இந்த விழாவில் ஊராட்சி தலைவர்கள் கல்லூர் கஸ்தூரிசுப்பிரமணியன், திருவாடானை இலக்கியா ராமு, திருவாடானை ஒன்றிய கவுன்சிலர் சாந்திராஜன் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். விழாவில். பள்ளி மாணவிகளின் கலை நிகழச்சிகள் நடைபெற்றது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad