விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் வருஷாபிஷேகம்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீனாட்சி அம்பாள் உடனுறை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் 500 ஆண்டுகள் பழமையான இந்த கோயில். இப்பகுதியை சேர்ந்தவர்கள் முயற்சியுடன் மீனாட்சி சுந்தேரஸ்வரர் டிரஸ்ட் அமைக்கப்பட்டு, புனரமைப்பு பணிக்கு இந்து சமய அறநிலையத்துறையிடம் அனுமதி பெற்றனர். அதன் படி 2012 அக்., மாதம் சுவாமி, அம்பாள், பரிவார தேவதைகளுக்கு பாலாலயம் செய்யப்பட்டு 13 கோடி ரூபாயில் புனரமைப்பு பணிகள் துவக்கப்பட்டன. இதில் அனைத்தும் கற்சிற்பங்களால் அமைக்கப்பட்டது. இதில் சுவாமி சன்னிதி முன்பாக 5 நிலைகள் கொண்ட 70 அடி ராஜகோபுரமும், அம்பாள் சன்னிதி முன்பு 3 நிலைகளில் 50 அடி உயரம் கொண்ட தெற்கு ராஜகோபுரம் அமைக்கப்பட்டது. கன்னிமூல கணபதி,முருகன், வள்ளி, தெய்வாணை உள்ளிட்ட 14 உப சன்னிதிகள் அமைக்கப்பட்டு 2016- ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி வருடம் தோறும் தொடர்ந்து வருஷாபிஷேகம் நடந்து வருகிறது. இதையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடந்தது. தொடர்ந்து, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பின்னர் கோயில் கல் மண்டபத்தில் காலை 6.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது. காலை 10:30 மணிக்கு மேல் 12 மணிக்குள் யாக சாலையிலிருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோயில் பிரகாரம் வழியாக வலம் வந்து சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், விமான கலசங்களுக்கும் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.
ஏற்பாடுகளை திருப்பணிக்குழு நிர்வாகிகள் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் செய்தனர்.
கருத்துகள் இல்லை