இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் அணையை திறந்து மலர் தூவி வரவேற்றனர்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் அணை நீர் தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்ட விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று இன்று முதல் சாத்தனூர் அணை நீர் தேக்கத்தில் இருந்து சுமார் 7 ஆயிரத்து 643 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் இடது மற்றும் வலது புற கால்வாயில் முறையே 302.40 மிக கன அடி மற்றும் 453 புள்ளி 60 மிக கன அடி ஆக மொத்தம் 756 மிக கன அடிக்கு மிகாமல் மார்ச் 10ஆம் தேதி வரை சுமார் 35 நாட்களுக்கு தொடர்ச்சியாக தண்ணீர் திறந்து விடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்தார்.
இந்த அறிவுறுத்தல் பேரில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் அணையை திறந்து மலர் தூவி வரவேற்றனர் அப்போது திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி விழுப்புரம் ஆகிய மாவட்டத்தில் உள்ள 88 ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு அதனை முழு கொள்ளளவான நிரப்பி விவசாயத்திற்கு பயன்படும் என அவர் அறிவித்தார் ஆனால் திறக்கப்படும் எந்த தண்ணீரானது திருவண்ணாமலை குறிச்சி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள கால்வாய்கள் முழுமையாக தூர்வாரப்படாமல் உடைந்தும் இருப்பதால் 12643 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு மிகவும் சிரமமாக இருப்பதாகவும் இதனை சீரமைக்க கோரி பலமுறை தமிழக அரசிற்கும் பொதுப்பணித் துறைக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியத்தோடு இதனை தூர்வாரப்படாமல் சரிசெய்ய படாமலும் தண்ணீர் திறந்துவிடுவது கால்வாய்களில் தேங்கி வீணாகி விடும் என அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
திறக்கப்படும் தண்ணீரானது ஒரு கண்துடைப்பு நாடகம் என அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர் இனிவரும் காலங்களில் முறையாக சாத்தூர் அணையை தூர் வாரி கால்வாய்களை சரி செய்து திறக்கப்படும் தண்ணீர் மூன்று மாவட்டங்களில் உள்ள 88 ஏரிகளுக்கு சென்றடைந்து விவசாய பாசனத்திற்கு பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க உதவிடுமாறு தமிழக அரசிற்கும் பொதுப்பணித்துறைக்கும் மூன்று மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளன
கருத்துகள் இல்லை