அரசு பள்ளியில் மானவர்கள் சேர்க்கை அதிகரிக்க முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் நடத்திய ஆண்டு விழா
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த அரசு பள்ளி கடந்த 1962ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அரசு பள்ளியில் ஆரம்ப காலங்கல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மனவிகள் கல்வி பயின்று வந்தார். கடந்த காலங்களில் பெண்களுக்கென்று தனியாக பள்ளி திறக்கப்பட்டதாலும், தனியார் பள்ளிகள் அதிகரித்தாலும், மக்களிடையே தனியார் பள்ளி மோகம் அதிகரித்தால் இந்த அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வந்தது.
இந்த நிலையில் இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க பல்வேறு ஏற்பாடுகளை செய்து மாணவர்களை சேர்த்தனர். இதனை கொண்டாடும் வகையில் பள்ளியில் ஆண்டு விழாவை வெகு விமர்சியாக நடத்தினர் இந்த விழாவிற்கு திருவாடானை நீதிபதி பாலமுருகன் சிறப்பு விருந்தி இராக கலந்து கொண்டார்: இந்த விழாவிற்கு முன்னதாக இப்பள்ளியில் ஆர்.எஸ் மங்கலம், அதனை சுற்றியுள்ள நடுநிலை பள்ளி, துவக்கப்பள்ளி, மற்றும் 15க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்கும், விளையாட்டு. கட்டுரைப் போட்டில் நடத்தப்பட்டு பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் சசிகுமார், செயலாளர் பகுருதீன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை யெ்திருந்தார்கள். ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள். பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை