பட்ட பகலில் மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய செயின் கொள்ளையர்கள்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மாணிக்கமஹால் திருமண
மண்டபத்தில் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த சீனிவாசலு (63) இவருடைய மனைவி பத்மாவதி(57) இன்று காலை உறவினர் திருமணத்திற்கு வந்திருந்தார். இந்த நிலையில் திருமணம் முடிந்து வீடு திரும்ப சாலையோரம் நின்றிருந்த போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி உள்ளனர்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அந்த மர்ம நபர்கள் யார் ? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை சாலை ஓரம் உள்ள கடைகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் அந்த மர்ம ஆசாமிகளின் திருட்டுச் சம்பவம் பதிவாகி உள்ளதா என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் மூதாட்டி கழுத்தில் இருந்த தங்கச் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கருத்துகள் இல்லை