ஆவடியில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆவடி மார்கெட் பகுதியில் நடந்து சென்று கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் தி.மு.க.மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர். திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் நடந்து சென்று பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனர்.
கே.எஸ்.அழகிரி அவர்களின் பேட்டி:
மத்திய பட்ஜெட் தாங்களின் போது இந்தியாவிற்கே சாபக்கேடு நடந்துள்ளதாக தெரிவித்தார். ஆயுள் காப்பீட்டு கழகத்தில் ( LIC) மூலமாக அதன் பிரிமீயம் தொகையை கொண்டு கிராமப்புற வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டது. இப்போது பா.ஜ.க.அரசு தனியாரிடம் கொடுத்து நாட்டை சீரழித்து வருவதாக அழகிரி குற்றம்சாட்டினார். மேலும் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் நம் நாட்டின் ஆலையங்கள் என்று ஜவஹர்லால் நேரு கூறினார். அதனை பா.ஜ.க.அரசு சிதைத்து விட்டதாக குற்றம்சாட்டினார்.
கருத்துகள் இல்லை