படப்பிடிப்பில் நடிகர் விஜயை காண என்எல்சியில் திரண்ட ரசிகர்களுக்கு இன்றும் தடியடி .....
நெய்வேலி என்எல்சி சுரங்க பகுதியில் விஜய் ரசிகர்கள் இன்றும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் தடியடி நடத்தி அதிரடிப் படையினரும் போலீசாரும் விரட்டியடித்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் க்ளைமேக்ஸ் காட்சிகள் நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் காட்சியாக்கப்படுகிறது. இதில் விஜயும் விஜய் சேதுபதியும் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு எங்கு நடைபெறுகிறது என்ற தகவல் இதுவரை பெவளியாகாத நிலையில் கடந்த புதன் கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் நெய்வேலிக்கு சென்று விஜயிடம் விசாரணை நடத்தினர்.
நேற்று முதல் படப்பிடிப்பு
பின்னர் நடிகர் விஜயை கையோடு சென்னைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து விஜய்க்கு சொந்தமான வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இரண்டு நாட்கள் நடைபெற்ற சோதனை நேற்று முன்தினம் இரவு நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய் நேற்று முதல் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.
நெய்வேலியில் ஷுட்டிங்
இதுவரை விஜயின் மாஸ்டர் பட ஷுட்டிங் எங்கு நடைபெறுகிறது என்ற தகவல் வெளியாகாத நிலையில், வருமான வரித்துறையின் விசாரணை மற்றும் ரெய்டால் நெய்வேலி என்எல்சியின் இரண்டாவது சுரங்கத்தில் ஷுட்டிங் நடைபெறுகிறது என்ற தகவல் தீயாய் பரவியது. இதனால் நேற்றே விஜயை காண ரசிகர்கள் என்எல்சி பகுதியில் திரண்டனர்.
கருத்துகள் இல்லை