தமிழகத்தில் 9,10 வகுப்புகளில் மாணவர்கள் இடைநிற்றல் 100% அதிகரித்துள்ளது அதிர்ச்சி தருகிறது- T.T.V.தினகரன்
சென்னை: தமிழகத்தில் 9,10-ம் வகுப்புகளில் மாணவர்கள் இடைநிற்றல் 100% அதிகரித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிடிவி தினகரன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 9 மற்றும் 10 வகுப்புகளில் மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் இடைநிற்றல் 100% அதிகரித்திருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வகுப்புகளில் 2015-16 கல்வியாண்டில் 8%ஆக இருந்த இடைநிற்றல் 2017-18 கல்வியாண்டில் 16.2%ஆக உயர்ந்திருக்கிறது.அதிலும்,அதிக அளவிலான இடைநிற்றல்கள் 2018 ஆம் ஆண்டில் நிகழ்ந்திருக்கின்றன. இது,பள்ளிக்கல்வி தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு குழப்பத்தில் இருக்கிறது என்பதைகாட்டும் குறியீடாகும்.
கருத்துகள் இல்லை