Header Ads

  • சற்று முன்

    இளையரசனேந்தல் பிரிக்காவை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துடன் இணைக்க வலியுறுத்தி போராட்டம்


    இளையரசனேந்தல் பிரிக்காவை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க வலியுறுத்தி தேசிய விவசாயிகள் சங்கத்தினர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ரெங்கநாயகலு, மாநில பொதுச்செயலாளர் பரமேஸ்வரன் ஆகியோர் தலைமையில் வந்த கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் இளையரசனேந்தல் பிரிக்காவை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் ரகுபதிடம் வழங்கிய மனுவில், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் இருந்த இளையரசனேந்தல் பிரிக்கா கடந்த 2008-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்துடன் இணைக்கப்பட்டது. வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைத்த நிலையில், தொடக்கக்கல்வித்துறை, மின்வாரியம், ஊராட்சி ஒன்றியம் ஆகியவை குருவிகுளம் யூனியனில் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், தற்போது திருநெல்வேலி மாவட்டம் பிரிக்கப்பட்டு, உதயமான தென்காசி மாவட்டத்துடன் குருவிகுளம் யூனியன் உள்ளதால், இளையரசனேந்தல் பிரிக்காவை சேர்ந்த 12 வருவாய் கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது தேவைகளுக்கு அங்கு அலைய வேண்டிய நிலை உள்ளது.

    இளையரசனேந்தல் பிரிக்காவை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.

    கோவிப்பட்டி - செய்தியாளர் -சிவராமலிங்கம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad