• சற்று முன்

    7 பேர் விடுதலையில் மத்தியரசு தான் சொல்ல வேண்டும் - அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ


    7 பேர் விடுதலையில் ஆளுநர் முடிவு எடுக்க அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றம் சொல்ல முடியாது, மத்தியரசு தான் சொல்ல வேண்டும் - அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ


    7 பேர் விடுதலையில் ஆளுநர் முடிவு எடுக்க அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றம் சொல்ல முடியாது, மத்தியரசு தான் சொல்ல வேண்டும், 7 பேர் விடுதலையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. ரெயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து குரல் கொடுத்த கொண்டு தான் இருக்கிறது. கம்பெனிகளுடன் ஒப்பந்தம் போட்டு அதிமுக என்றைக்கும் தேர்தலை சந்தித்தது கிடையாது. மக்களை மட்டும் நம்பி சந்திக்கும் இயக்கம் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்தறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தெரிவித்துள்ளார்.


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை மற்றும் வானரமுட்டியில் தமிழக அரசியின் விலையில் மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கலந்து கொண்டு 270 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினர். 

    இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேகையில் நடிகர் ரஜினிகாந்த் இன்னும் கட்சி தொடக்கவில்லை, கூட்டணி பற்றி பேச வேண்டிய அவசியமில்லை என்று பா.ம.கநிறுவனர் ராமதாஸ் கூறிய பின்னர் அது பற்றி கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை,மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேரரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் உறுதியாக இருந்தார், மத்தியரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதினார், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அதே போன்று அவரது வழியில் தற்பொழுது முதல்வர் தலைமையிலான தமிழக அரசும் தீர்மானம் நிறைவேற்றி மத்தியரசுக்கு அனுப்பியுள்ளது.மேலும் இந்த ஆட்சியில்தான் பேரரறிவாளன் உள்ளிட்டவர்களுக்கு பரோல் வழங்கியது இந்த அரசு தான்.திமுக ஆட்சியில் இருந்த போதும், மத்தியில் கூட்டணியில் இருந்த போதும் இது போன்ற நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை, இதையெல்லாம் வைகோ புரிந்து கொண்டு பேச வேண்டும், அரசியலுக்காக பேசுக்கூடாது என்றும்,7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளார், அவர்கள் பதில் சொல்ல வேண்டும்,இந்த நிலையில் நீதிமன்றம் நாங்கள் தலையிட முடியாது என்று கூறியுள்ளது.ஆளுநர் முடிவு எடுக்க அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றம் சொல்ல முடியாது, மத்தியரசு தான் சொல்ல வேண்டும்.7பேர் விடுதலையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. தேவையான அழுத்ததை தந்து கொண்டு இருக்கிறோம்.டெல்டா மாவட்டங்கள் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தது மட்டுமின்றி, மத்தியரசிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளோம். அவர்கள் விரைவில் பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்பது வேளாண்மை தொழில்களை தவிர, வேறு எந்த தொழில்களும் செயல்படுத்தப்படாது என்பது தான் அந்த அறிவிப்பின் நோக்கம்

    ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அது பற்றி கூற முடியாது. முடிவு எது வந்தாலும்,அது பற்றி கட்சி தலைமை முடிவு எடுக்கும்.ரெயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து குரல் கொடுத்த கொண்டு தான் இருக்கிறது.பாரதிய ஜனதா கட்சியுடன் நல்லுறவு இருப்பதால் தான் அதிமுக கொடுத்த அழுத்தம் காரணமாக தமிழகத்தில் இரட்டை ரெயில்வே பாதை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.மேலும் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு மெட்ரோ ரெயில்வே திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.நடைபெறமால் இருக்கும் மீதி ரெயில்வே பணிகளுக்கு நாங்கள் குரல் கொடுப்போம்.திமுக கூட்டணியில் இருக்கும் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது பற்றி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும்.கம்பெனிகளுடன் ஒப்பந்தம் போட்டு அதிமுக என்றைக்கும் தேர்தலை சந்தித்தது கிடையாது. மக்களை மட்டும் நம்பி சந்திக்கும் இயக்கம்.அதிமுக.237 சட்டமன்ற தொகுதியில் ஒரே சின்னத்தில், யாரூடன் கூட்டணி இல்லமால் தனியாக நின்று வெற்றி பெற்ற இயக்கம் அதிமுக,எ;ப்பொழுது வந்தாலும் நாங்கள் மக்களை தான் சந்திப்போம் தவிர, கம்பெனிகளுடன் கூட்டணி வைத்து அவர்கள் காட்டும் வழிகாட்டுதலில் சந்திப்பது மக்களை நம்பமால் இருப்பது என்று அர்த்தம்,நாங்கள் மக்களுடன் கூட்டணி வைத்து மக்களை மட்டும் நம்பி தேர்தலை சந்திப்போம் என்றார்.

    செய்தியாளர் : சிவராமலிங்கம் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad