Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் தாலூகா அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற மாற்றுத்திறனாளி


    கோவில்பட்தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.வு.சி.நகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பத்மசங்கர் என்பவர் 3 சக்கர மோட்டர் சைக்கிள் வாகனம் வழங்க கோரி மனு அளித்தும், 2 ஆண்டுகளாக வழங்கமால் தான் அலைகழிக்கப்படுவதாக கூறி தாலூகா அலுவலகம் முன்பு உடலில் மண்ணெணெயை ஊற்றி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பத்மசங்கருக்கு 3 சக்கர மோட்டர் சைக்கிள் வாகனம் விரைவில் வழங்கப்படுவது மட்டுமின்றி, இலவச வீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் மணிகண்டன் உறுதியளித்துள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.வு.சி.நகரைச் சேர்ந்த முத்தையா மகன் பத்மசங்கர்(44) இவர் ஒரு மாற்றுத்திறனாளி. பத்மசங்கருக்கு இடையில் ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக கால்கள் செயலிந்து போய்விட்டது. பத்மசங்கருக்கு திருமணமாகி முத்துலெட்சுமி என்ற மனைவியும், 2பெண்குழந்தைகளும் உள்ளனர். ஆரம்பத்தில் கூலி வேலைக்கு சென்று கொண்டு இருந்த பத்மசங்கர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் எங்கு சென்றாலும் மற்றவர்கள் துணை இல்லமால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 3 சக்கர மோட்டர் சைக்கிள் வாகனம் வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ளார். 

    இது தவிர கோவில்பட்டி தாலூகா அலுவலகத்திலும் மனு அளித்துள்ளார். ஆனால் தொடர்ச்சியாக பலமுறை அலைந்தும் இதுவரை தனக்கு 3 சக்கர மோட்டர் சைக்கிள் வாகனம் வழங்காத காரணத்தினால் மனமுடைந்த பத்மசங்கர் இன்று தாலூகா அலுவலகம் முன்பு தனது உடலில் மண்ணெணெயை ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார். இதனை பார்த்த அருகில் இருந்த காவலர்கள் மற்றும் தாலூகா அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டன் விரைந்து வந்து பத்மசங்கரை அழைத்து பேசினர்.இதையெடுத்து விரைவில் 3 சக்கர மோட்டர் சைக்கிள் வாகனம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், தற்பொழுது பத்மசங்கர் வாடகை வீட்டில் வசிப்பதால், அவருக்கு அரசு இலவச வீடு வழங்கவும் நடவடிக்ககை எடுப்பதாக உறுதியளித்தார். தொடர்ந்து அவரை தாலூகா அலுவலக ஊழியருடன் பத்திரமாக ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இதனால் தாலூகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.டியில் தாலூகா அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற மாற்றுத்திறனாளி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad