Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலை மாவட்டம் செண்பகத்தோப்பு அணையை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.


    திருவண்ணாமலை மாவட்டம் செண்பகத்தோப்பு அணையில் மொத்தமுள்ள 7 ஷட்டர்களில் மூன்று ஷட்டர்கள் நீக்கப்பட்டு பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது,
    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் செண்பகத்தோப்பு கிராமத்தில் செண்பகத்தோப்பு அணை அமைந்துள்ளது.இந்த அணை 2001இல் பணி துவங்கப்பட்டு 2007இல் முடிக்கப்பட்டது. அணை கட்டும்போது பொருத்தப்பட்ட ரேடியல் ஷட்டர்கள் சரியாக இயங்காததால் முழு அளவு தண்ணீரை தேக்க முடியாமல் இருந்தது. எனவே விவசாய பெருமக்கள் ரேடியல் ஷட்டரை புதுப்பித்து முழு அளவு தண்ணீரை தேக்க முடியாமல் இருந்தது. விவசாயப் பெருமக்கள் ரேடியல் ஷட்டரை புதுப்பித்து முழு அளவு தண்ணீரை சேகரிக்க தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் அவர்கள் செண்பகத்தோப்பு அணையின் ரேடியல் ஷட்டரை புதியதாக பொருத்துவதற்கு ரூபாய்  1637 லட்சம் ஒதுக்கீடு செய்து 15 10 2019 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பொதுப்பணித் துறையின் மூலம் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு 30 01 2020 முதல் பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது இப்பணி துவக்கப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டுக்குள் இந்த பணிகள் முடிக்கப்பட்டு முழு கொள்ளளவான 62 அடி தண்ணீர் தேக்கப்படும்.

    இந்த அணையின் மூலம் போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு மற்றும் ஆற்காடு தாலுகாவில் உள்ள 48 ஏரியின் மொத்த ஆயக்கட்டு 7497 ஏக்கர் பாசன வசதி பெறும்.மேலும் அணையின் கரை, வடிகால், சாலை, பணியாளர் குடியிருப்பு, ஆய்வு மாளிகை, அணைக்கட்டுகள், பொதுமக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க ரூ.1761 லட்சத்திற்கு மதிப்பீடு தயாரித்து அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளது. அரசின் நிர்வாக ஒப்புதல் கிடைக்கப் பெற்ற பின் மேற்கண்ட பணிகள் செய்து முடிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad