திருவாடானை அருகே சீனாவில் இருந்தவர்கள் சொந்த ஊருக்கு திரும்பினார்கள்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே புலியூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 50க்கும் மேற்பட்டவர்கள் சீனாவில் ஆங்காங்கே பல ஆண்டுகளாக வேலை பார்த்து வருகின்றார்கள். தற்போது சீனா நாட்டில் கொறனோ வைரஸ் தாக்குதலில் நோய் பரவி பல நூறு போர் இறந்து போய்விட்டார்கள் என செய்தி வட்டாரங்கள் தெரிவித்தது. இதனால் திருவாடானை தாலுகா திருவாடானை அருகே, புலியூர், வெள்ளையபுரம், பழங்குளம்,வில்லாரேந்தல், போன்ற கிராமங்களில் இருந்து பல்வேறு வேலை பார்த்து வந்த நிலையில் இந்த நோய் தாக்கதலால் அச்சமுற்று தாயகம் திரும்பியுள்ளனர். அதில் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம், முருகானந்தம், தியாகு, அழகுதிருநாவுக்கரசு சீனாவில் வைரஸ் நோய் தாக்குதல் பற்றி கேட்ட போது அவர்கள் இருந்த இடம் சங்காய் மாநிலம் என்றும் இவர்கள் இருக்கும் ஊருக்கும் நோய் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான உகன்டாய்க்கும் 1000 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் இங்கு தான் அதிக அளவில் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர் இந்த நோய் பற்றி கேட்டதற்கு 7ம் அறிவு படத்தில் வருவதுபோல உள்ளதாக தெரிவித்தார்கள். சீனாவில் இருந்து எங்கள் ஊருக்கு 10க்கும் மேற்பட்டவர்கள் வந்தவர்களில் நோய் தாக்கல் யாருக்கும் இல்லை எங்களையும் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து செக்கப் செய்ய வரச்சொல்லியிருப்தாக தெரிவித்தார்கள். எதனால் இந்த நோய் பரவி வருகிறது என்பது பற்றி தெரியவில்லை என்றும் கூறினார்கள்.
மேலும் தற்போது சீனாவில் உணவு சரிவர கிடைக்கவில்லை என்றும் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அப்படி போகும் நபர்கள் தடுத்து திருப்பி அனுப்பிவிடுகிறார்கள். அதனால் போக்கு வரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சீனாவில் சீன வருடப்பிறப்பு 8வது நாள் பத்துநாள் வெகு விமர்சியாக கொண்டாடப்படும் வருடப்பிறப்பு இந்த நோய் தாக்குதலால் கொண்டாடாப்படவில்லை. தெருக்களில் மணிதர்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது என்றும் தெரிவித்தார்கள்.
கருத்துகள் இல்லை