திருப்பத்தூரில் திமுக நகர கழகம் அண்ணாவின் 51 ஆவது நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
திருப்பத்தூரில் திமுக நகர கழகம் அண்ணாவின் 51 ஆவது நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு அமைதி ஊர்வலமாக சென்று நகர திமுக கழகம் சார்பில் நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் அண்ணாவின் 51 ஆவது நினைவு நாளை முன்னிட்டு முழு திருவுருவ சிலைக்கு வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்ச்செல்வி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள்,நகர செயலாளர்கள்,ஒன்றிய செயலாளர்கள், கழகத் தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து
கொண்டனர்.
கருத்துகள் இல்லை