பத்திரிகையில் அறிஞர் அண்ணாவின் பங்களிப்பு
அறிஞர் அண்ணா சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், சமூகமுற்போக்கு சிந்தனையாளர், என பல பன்முகம் கொண்ட பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைவு இன்றும் பேசப்படுகின்ற அளவிற்கு வெற்றிடமாகத்தான் உள்ளது என்றால் மிகையாகாது.ஈ வெ. ரா.பெரியார் தொட்ர்பு ஏற்பட்ட பிறகு குடியரசு இதழிலில் துணை ஆசிரியராக இருந்தார். பின்னர் விடுதலை,மாலைமணி ,நம் நாடு, மற்றும் காஞ்சி , Home land என்கிற ஆங்கில வார இழலில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 1942 - ல் திராவிட நாடு என்கிற பத்திரிகைக்கு ஆசிரியராகவும்,வெளியீட்டாளராகவும் இருந்திருக்கிறார். புற்று நோய் காரணமாக உடல் நலிவுற்று மருத்துவமனையில் சிகிக்சை பலனின்றி உயிர் இழந்தார். இவர் இறுதியாக என்.எஸ்.கிருஷ்னனின் திருவுருவச்சிலையை T நகரில் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர், கருணாநிதி ,ஈ.வெ.கி.சம்பத், இந்தி திரைப்பட நடிகர் திலீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" "கடவுள் ஓன்று மனித நேயமும் ஓன்று " என்கிற கொள்கை அனைவரையும் கவர்ந்தது.
ஆசிரியர் : ஆ.வீ.கன்னையா
கருத்துகள் இல்லை