தமிழகத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி - அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை, தொழில்நெறி வழிகாட்டி மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,; தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூகலந்துகொண்டு, முகாமினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து வேலைநாடுநர்களுக்கு விண்ணப்ப படிவத்தினை வழங்கினார். மேலும் மகளிர் திட்டத்தின் மூலம் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு உத்தரவு கடிதங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பேசியதாவது:
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பள்ளி கல்வித்துறைக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்து தமிழக மாணவ, மாணவிகள் சிறப்பாக கல்வி பயில பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்கள். மாணவர்கள் சிறந்த கல்வி பயின்றும் எதிர்காலத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நல்ல வேலைவாய்ப்பு மற்றும் தொழில்களை செய்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக வேலைவாய்ப்பு துறை மூலம் இதுபோன்ற தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளார்கள். நமது மாநிலத்தின் தொழிற்சாலைகள் அதிகமாக துவங்கப்பட்டு வருகிறது. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதன் முதலாக நடத்தினார்கள். அதேபோல மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி அதன்மூலம் பல்வேறு தொழில்கள் நமது மாநிலத்தில் துவங்கப்பட உள்ளது. மேலும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பல்வேறு தொழில்கள், வேலைவாய்ப்புகளை பார்வையிட்டு வந்துள்ளார்கள். நாளைய தினம் இந்தியாவிலேயே முதன்முதலாக ரூ.1200 கோடி மதிப்பீட்டில் சேலம் மாவட்டத்தில் கால்நடை பூங்காவினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் துவங்கி வைக்கப்பட உள்ளது. மேலும் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் ரூ.50,000 கோடி மதிப்பில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நேரடியாக 10,000 , மறைமுகமாக 50,000 வேலைவாய்ப்புகள் உருவாகும், இம்முகாமில் கலந்துகொள்ளும் நீங்கள் அனைவரும் வேலைவாய்ப்பினை பெற்று வாழ்வில் வளம் பெற வேண்டும் என பேசினார்.
நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், நேஷனல் பொறியியல் கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாசலம், மகளிர் திட்டம் திட்ட அலுவலர் திருமதி.ரேவதி கோவில்பட்;டி கோட்டாட்சியர் விஜயா, வேலைவாய்ப்புத்துறை உதவி இயக்குநர் பேச்சியம்மாள், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சண்முகவேல், நேஷனல் பொறியியல் கல்லூரி முதல்வர் காளிராஜ்;முருகவேல், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முக்கிய பிரமுகர்கள் அய்யாத்துரைபாண்டியன், விஜயபாண்டியன், தனஞ்ஜெயன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை