திருவண்ணாமலை ஊரக உள்ளாட்சி தேர்தல் காவல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் முருகதாஸ் அவர்கள் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
திருவண்ணாமலை ஊரக உள்ளாட்சி தேர்தல் காவல் பணியில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் கண்ட்ரோல் ரூமில் பணியாற்றிவந்த காவல் உதவி ஆய்வாளர் முருகதாஸ் அவர்கள் மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார்.
திருவண்ணாமலை நகர காவல்நிலையத்தில் பணியாற்றும் உதவி காவல் ஆய்வாளர் முருகதாஸ் அவர்கள் திருவண்ணாமலை சண்முகா மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று இரவு 11 மணி அளவில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், டாக்டர் பரிசோதித்த பின் உயிரிழந்ததாக மருத்துவர் அறிவித்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை