சீட்டம்பட்டு ஊராட்சி மன்ற தலைவருக்கான வாக்குகள் மறு வாக்கு எண்ணிக்கை செய்யக் கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு அளித்துள்ளனர்
ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆட்டோ சின்னத்தில் போட்டியிட காவல்காரன் என்பவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது வாக்கெண்ணும் அலுவலர் ஆட்டோ சின்னத்தில் விழுந்த 2 வாக்குகள் வாக்குச்சீட்டில் மை பட்டிருந்த போதிலும் எதிர்த் தரப்பினர் கூச்சல் குழப்பம் போட்டு வாக்கு எண்ணும் அதிகாரிகளை மிரட்டி அந்த வாக்குச் சீட்டுகளை செல்லாத வாக்குகளாக அறிவிக்க கோரி பிரச்சனை செய்தனர் இதனால் வாக்கெண்ணும் அலுவலர் செல்லாது என வாக்குப் பெட்டியில் போட்டு விட்டார் எனவே தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரிக்கை வைக்கப்பட்டது
ஆனால் அந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் எதிர் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனவே மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை