தேர்தலில் வாக்களிக்காததால் வீடுகள் மீது கல் வீசி கலட்டா நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேட்சையாக பேட்டியிட்ட பூசை என்பவர் 100 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார் பணம் வாங்கி கொண்டு ஊர்மக்கள் தோர்கடித்துவிட்டதாக பூசை மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் புளியம்பட்டி பகுதியில் உள்ள வீடுகளில் கற்களை வீசியும் மதுபாட்டில்களை உடைத்தும் பெண்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி வந்துள்ளனர்
இதனால் சுயேட்சை வேட்பாளர் மீது ஆத்திரமடைந்த கிராம மக்கள் செங்கம் - இளங்குண்ணி சாலையில் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர் சாலைமறியலை ஈடுபட்டு வருதை அறிந்த மேல்செங்கம் காவல் ஆய்வாளர் மலர் சம்பவ இடத்திற்க்கு வந்து பொதுமக்களிடம் சமரசத்தில் ஈடுபட்டார்
பின்னர் சுயேட்சை வேட்பாளர் பூசை மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த பின்னர் சாலை மறியலை கிராம மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்
தேர்தலில் தோல்வி அடைந்ததால் வீடுகளில் கல்வீசி பெண்களிடம் தகாத வார்தைகளில் பேசிய சம்பவத்தால் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
கருத்துகள் இல்லை