Header Ads

  • சற்று முன்

    ஆந்திர கிராமத்தில் முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித்துகள்


    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஹோசூர் கிராமத்தில், படித்த இளைஞர்கள் சிலர் பொது இடங்களில் மற்றவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது மற்றும் எல்லோரும் படிக்கும் பள்ளிகளிலேயே படிப்பது, கிராம கோயில்களில் நுழைவது என்று முன்னெடுத்த இயக்கம் 2019 டிசம்பர் 14ஆம் தேதியன்று உள்ளூர் கோயிலில் நுழையும் வாய்ப்பை பெற்றுத் தந்தது.

    ''எங்களுக்கு இப்போதுதான் சுதந்திரம் கிடைத்துள்ளது. எங்கள் வாழ்க்கையில் முதல் முறையாக இப்போதுதான் கோயிலுக்குள் நாங்கள் நுழைந்திருக்கிறோம். கோயில் கருவறையில் சாமி எப்படி இருக்கும் என்று இதுநாள் வரை எங்களுக்குத் தெரியாது. கோயிலுக்குள் நுழைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறோம். நாங்களும் இப்போது மத சடங்குகளைச் செய்ய முடிகிறது,'' என்று தலித் சமூகத்தைச் சேர்ந்த சுரேந்திரா கூறினார்.

    தமிழ்நாட்டில் வாணியம்பாடி அருகே நாராயணபுரம் ஆதி திராவிடர் காலனியைச் சேர்ந்தவர்கள், இறந்தவரின் உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்ல பாதை மறுக்கப்பட்டதால், பாலத்தில் இருந்து கயிறு கட்டி கீழே இறக்கியது பற்றிய செய்தி ஆகஸ்ட் 2019ல் வெளியானபோது, அந்த காணொளி வைரலானது.

    இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், ஆந்திராவில் உப்புலூரு கிராமத்தில் உள்ள ஒரு கோயிலில் தலித்துகள்தான் பூசாரிகளாக உள்ளனர். அந்தகி கிராமத்தைச் சேர்ந்த அனைத்து சமுதாயத்தினரும் அந்தக் கோயிலில் வழிபட்டு வருகிறார்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad