Header Ads

  • சற்று முன்

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்


    செங்கம் பேரூராட்சி அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை  பயன்படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் உள்ள தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் அதிக அளவில் அலுவலக வளாகத்தில் இருந்து வருவதால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர் செங்கம் நகரம் முழுவதும் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என செங்கம் பேரூராட்சி நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது இதில் ஒரு கட்டமாக கடந்த ஒரு மாதமாக செங்கம் நகரம் முழுவதும் பதிக்கு வைத்திருக்கின்ற பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர் வணிக நிறுவனங்கள் முதல் சிறு குறு வியாபாரிகள் வரை பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தினால் அதனை பறிமுதல் செய்து 500 முதல் 50,000 வரை அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது இருப்பினும் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக  தடைசெய்ய வேண்டுமென  பேரூராட்சி  சார்பில்  பல்வேறு விளம்பரங்கள் பதாகைகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன ஆனால்  பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்து வரும் பேரூராட்சி நிர்வாகம் ஊருக்கு உபதேசம் என்ற போக்கில்  தனது அலுவலகத்தில் ஏராளமான  பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தி அதனை குப்பைத் தொட்டிகளில் கொட்டாமல் அலட்சியத்தோடு அலுவலக வளாகத்திலேயே வீசி இருப்பது பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கிறது செங்கம் பகுதியில் குறிப்பாக சாலையோர தள்ளுவண்டி வியாபாரிகள் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் செங்கம் தேர்வுநிலை பேரூராட்சி அதிகாரிகள் சில நாட்களாக பெரிய வணிக வளாகத்தில் பயன்படுத்தப்படும் பண்டல் பண்டல் களான பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்யாமல் இருந்து வரும் சூழலில் தற்பொழுது பேரூராட்சி அலுவலகத்தில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தி அதனை அகற்றாமல் வைத்திருப்பது வேதனையை அளித்து வருவதாகவும் இதுபோன்று அலட்சியத்தோடு செயல்படும் செங்கம் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத் திற்கு மாவட்ட நிர்வாகம் அபராதம் விதிக்குமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் எனவே மாவட்ட ஆட்சியர் செங்கம் தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தை ஆய்வு செய்து பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad