• சற்று முன்

    மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மாணவர்கள் சாலை மறியல்



    திருவண்ணாமலை நகரம் வேட்டவலம் சாலை வசந்தம் நகரில் அமைந்துள்ள, அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  நலத்துறை மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரம் குறைவாக தயாரிக்கப்படுவதாகும், விடுதியை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்பதாகவும், விடுதி வளாகத்தில் புதர்மண்டி கிடப்பதாகவும், பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து, விடுதி மாணவர்கள் வியாழனன்று வேட்டவலம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார், விடுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad