• சற்று முன்

    30 ஆண்டுகளுக்கு பிறகு கோவில்பட்டி தெப்பக்குளம் நீரம்பியதால் - ஆர்வமுடன் தர்ப்பணம் செய்த மக்கள்


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அகத்தியர் பூஜிக்கப்பட்ட செண்பகவல்லியம்மன் பூவனநாதசுவாமி திருக்கோவிலில் உள்ள தெப்பக்குளம் 30ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் நிரம்பி உள்ளதால் பொது மக்கள் தை அமாவாசையை முன்னிட்டு தங்களது முன்னோர்களுக்கு காலை முதல் ஆர்வமுடன் திதி கொடுத்து தர்ப்பணம் செய்தனர்.

    அமாவாசை தினத்தன்று திதி கொடுப்பதால், முன்னோர்களின் ஆசி நமக்குக் கிடைப்பதுடன் குடும்பத்தில் அமைதியும்,மகிழ்ச்சியும் ஏற்படும். பித்ரு தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. வருடத்தில் மூன்று முக்கிய அமாவாசைகள் வருகின்றன. தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை. இந்த மூன்று அமாவாசை தினங்களில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் படையல் கொடுத்துவருவது வழக்கம். இன்று தை அமாவாசை என்பதால் தமிழகம் முழுவதும் மக்கள் முன்னோர்களுக்கு திதிகொடுத்து தர்பணம் செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லியம்மன் பூவனநாதசுவாமி திருக்கோவில் அகத்தியாரால் பூஜிக்கப்பட்ட ஆலயங்களில் ஒன்று. இந்த ஆலயத்தில் உள்ள தெப்பக்குளத்தில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளாக அமாவாசை செய்வது வழக்கம். கடந்த 30 ஆண்டுகளாக போதிய நீர் இல்லாத காரணத்தினால் மக்கள் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு வந்து தர்ப்பணம் செய்து வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தெப்பக்குளத்தினை தூர் வாரி சீரமைத்தனர். மேலும் நல்ல மழை பெய்த காரணத்தினால் தெப்பக்குளம் மழைநீரால் நிறைந்தது. இதனை தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு பின் தெப்பகுளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் மக்கள் இன்று ஆர்வமுடன் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்தனர். கடந்த ஆண்டுகளில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்ட நிலையில் இந்தாண்டு, தண்ணீர் இருப்பதால் காலையில் இருந்தே கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad