கோவில்பட்டி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு - திரளான பக்தர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர;கள் கலந்து கொண்டனர் ;.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலுடன் இணைந்த அருள்மிகு நீலாதேவி - பூதேவி உடனுறை அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, திருப்பள்ளி மற்றும் திருவனந்தல் பூஜை நடைபெற்றது. அதனையடுத்து, சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதையெடுத்து சுந்தரராஜ பெருமாள் சயன திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் . பின்னர் ; மாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் வழியாக வந்து சுவாமி, நம்மாழ்வாருக்கு காட்சி கொடுத்தார;.இரவு கருட வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது. நிகழ்ச்சியில் திளான பக்தர்கள் கலந்து கொண்டனர் .
கருத்துகள் இல்லை