Header Ads

  • சற்று முன்

    உள்ளாட்சி தேர்தல் முன் விரோதம் 6 பேர் கைது, துப்பாக்கி- ஆயுதங்கள் பறிமுதல் கமுதி அருகே பரபரப்பு

    Add caption
    இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே 2 துப்பாக்கி, அரிவாள்களுடன் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் உள்ளாட்சி தேர்தல் முன் விரோதத்தில்  ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் கிராம மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

    கமுதி அருகே உள்ள தோப்படைப்பட்டியில் இரவு நேரங்களில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சிலர் இருசக்கர வாகனங்களில் சுற்றி வருவதாகவும் அந்த பகுதியில் பயங்கர ஆயுதங்கள் மண்ணில் புதைத்து பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக கடந்த 6 நாட்களாக திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். தோப்படைப்பட்டியில் ஒதுக்குப்புறமான திருமேனியம்மன் கோவில் அருகில் சிலர் பேசிக்கொண்டிருந்ததை கண்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் பல தகவல்கள் கிடைத்தன.


    சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஓ.கரிசல்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ராஜாமணி என்பவரும், அவரை எதிர்த்து பாண்டி என்பவரும் போட்டியிட்டுள்ளனர். இதில் ராஜாமணி வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக தேர்தலில் தோல்வியடைந்த பாண்டி வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் பகை முற்றியுள்ளது. பாண்டியின் செயலால் ஆத்திரமடைந்த ராஜாமணியின் தாயார் செல்வமேரி வழக்கு தொடர்ந்த பாண்டியை கொலை செய்ய திட்டம் தீட்டி அதை செயல்படுத்த சிலரை தேர்வு செய்துள்ளார். இந்த திட்டத்துக்கு உடந்தையாக வந்த நபர்களைத்தான் தற்போது போலீசார் மடக்கி படித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதன் அடிப்படையில் செல்வமேரியையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கைதான 5 பேர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் பாண்டியை கொலை செய்வதற்கு பயன்படுத்த துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


    இதனையடுத்து அந்த கிராமத்தில் கொலைக்கு பயன்படுத்த  மேலும் வேறு எங்காவது வெடிகுண்டுகள், உள்ளிட்ட ஆயுதங்கள் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து போலீசார் பல்வேறு இடங்களை தோண்டி சோதனை நடத்தினர். இதில் தோப்படைப்பட்டியில் நேற்று 4 இடங்களில் மண் அள்ளும் எந்திரம் மற்றும் மண் வெட்டிகளால் தோண்டி சோதனை நடத்தப்பட்டது. போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையால் ஒரு இடத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 2 துப்பாக்கிகள், 2 வீச்சரிவாள்கள் கிடைத்துள்ளன. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடையதாக செல்வகுமார் (வயது 40), ராமலிங்கம் (40), முருகன் (28), அந்தோணி, ஆத்திமுத்து (28), ஆகியோரையும் கொலைக்கான திட்டத்தை தீட்டியதாக செல்வமேரி உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்துக்கு முன்னதாக கொலை திட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட செல்வமேரிக்கு  கமுதி காவல்நிலைய பொறுப்பு ஆய்வாளர் கஜேந்திரன் செல்வமேரி தரப்புக்கு கைது நடவடிக்கை மற்றும் காவல்துறை செயல்பாடுகள் குறித்து முன் கூட்டியே தகவல் கொடுத்ததாகவும் இதனால் உசாரான செல்வமேரி தன்னை மனதளவில் போலீசார் துன்புறுத்துவதாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொய் புகார் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலதின் அடிப்படையிலேயே கைது செய்துள்ளதாக காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.

    இதனால் செல்வமேரி தரப்புக்கு காவல்துறை நடவடிக்கைகளை முன்கூட்டியே தகவல் தெரிவித்த கமுதி பொறுப்பு ஆய்வாளர் கஜேந்திரனை பணி இடைநீக்கம் செய்ய இராமநாதபுரம் சரக டிஐஜி ரூபேஜ்மீனாவுக்கு மாவட்ட காவல் கண்கானிப்பாளர் வருண்குமார் பரிந்துரை செய்துள்ளார்.
    இந்த சம்பவம் குறித்து தோப்படைப்பட்டி கிராம மக்கள் கூறுகையில் இந்த சம்பவத்தால் போலீசாருக்கு பயந்து இப்பகுதி ஆண்கள் வீட்டில் தங்காமல் மனைவி, குழந்தைகளை பிரிந்து காட்டுப்பகுதிகளில் மறைந்து வாழ்கின்றனர். இரவு நேரங்களில் விசாரணை என்ற பெயரில் போலீசார் சாதாரண உடையில் வந்து துன்புறுத்துவதால் பெண்கள் வீடுகளை விட்டு வெளியேற அச்சப்படுகின்றனர். என்று அவர்கள் கூறினர்.

    தேர்தல் முன் விரோதத்தால் கொலை சம்பவம் நடக்கும் முன் துரித நடவடிக்கை மேற்கொண்டு பயங்கர ஆயுதங்களையும் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்து குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுவோரையும் உடனடியாகவும் கைது செய்த திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் தலைமையிலான போலீசாரையும், சம்பவத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட இராமநாதபுரம் சரக டிஐஜி ரூபேஜ்மீனாவுக்கும் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் வருண்குமார் அவர்களையும் பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்






    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad