கோவில்பட்டி பகுதியில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற குடியரசு தின விழா
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள பள்ளிகள், நகராட்சி உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. பள்ளி மாணவ-மாணவிகளின் அசத்தல் கலைநிகழ்ச்சிகள், என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு என குடியரசு தின விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.உ.சி.அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் குடியரசு தின விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. என்.சி.சி மாணவர்களின் அணிவகுப்புவுடன் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பாண்டவர்மங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் அன்புராஜ் கொடியேற்றி வைத்து, கல்வி, விளையாட்டுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர். இதே போன்று கோவில்பட்டி நகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நகராட்சி ஆணையர் பொறுப்பு கோவிந்தராஜன் கொடியேற்றி வைத்தார். விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ஆணையர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
கருத்துகள் இல்லை