திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனை சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையும், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும் இணைந்து தீபத் திருவிழாவை காண வரும் பக்தர்களுக்கான அவசர சிகிச்சை ஊர்தி மற்றும் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் கே. எஸ். கந்தசாமி தொடங்கிவைத்தார். இம்முகாமிற்கு ஆதிபராசக்தி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மரு. டி. ரமேஷ் தலைமை தாங்கினார். மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டி. என். சேகர் அனைவரையும் வரவேற்றார். இம்முகாமில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் மருத்துவ முகாம் மற்றும் அவசர சிகிச்சை ஊர்திகளை தொடங்கி வைத்தார். இம்முகாமில் திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டி. பாண்டியன், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றத்தின் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் பி. அமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். செயலாளர் எஸ். துரைசாமி நன்றி கூறினார். இம்முகாமில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டன
கருத்துகள் இல்லை