திருப்பத்தூர் அருகே ஜவ்வாது மலைப்பகுதியில் 10 கிலோ கஞ்சா நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் 2 பேர் கைது..
திருப்பத்தூர் அருகே ஜவ்வாதுமலை பகுதியில் கஞ்சா தோட்டம் அமைத்து அறுவடை செய்யப்பட்ட 10 கிலோ கஞ்சா மற்றும் நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி விஜயகுமாருக்கு ஜவ்வாது மலைப்பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டு.அதனை திருப்பத்தூர் பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று இரவு தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் தலைமையில் இரவு ஜவ்வாது மலை புதூர் நாடு அருகே உள்ள கம்பு குடி கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த நாகராஜ்(45( என்பவரது வீட்டை சோதனை செய்து பார்த்தபோது 2 மூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சா இரண்டு முட்டைகள் இருந்தது. மேலும் இவர் அருகே உள்ள அவரது நிலத்தில் துவரையுடன் கஞ்சாயும் சாகுபடி செய்து. அதனை அறுவடை செய்து தற்போது விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் அதன் அருகே உள்ள சிவா(28)என்பவரது வீட்டிலும் கஞ்சா செடிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதே வீட்டில் உள்ள ஒரு மாட்டுக் கொட்டகையில். உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை