• சற்று முன்

    பேட்ட வில்லனின் 26 வயது தங்கை மரணம்: திரையுலகினர் இரங்கல்


    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் மூலம் கோலிவுட் வந்தவர் பாலிவுட் நடிகர் நவாசுத்தீன் சித்திக்கி. அவரது தங்கை சியாமா தம்ஷி சித்திக்கி(26). சியாமாவுக்கு மார்பக புற்றுநோய் அதுவும் முற்றிய நிலையில் இருந்தது அவருக்கு 18 வயது இருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டது.
    இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். அவர் மரணம் அடைந்த செய்தி அமெரிக்காவில் படப்பிடிப்பில் இருந்த நவாசுத்தீன் சித்திக்கியிடம் தெரிவிக்கப்பட்டது. சியாமாவின் இறுதிச் சடங்கு உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள புதானா கிராமத்தில் நேற்று நடைபெற்றது.

    முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சியாமாவின் பிறந்தநாள் அன்று நவாசுத்தீன் சித்திக்கி ட்விட்டரில் கூறியிருந்ததாவது,

    என் தங்கைக்கு 18 வயது இருந்தபோது அவருக்கு மார்பக புற்றுநோய், முற்றிய நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவரின் தைரியத்தால் தான் அனைத்தையும் தாங்கி இவ்வளவு தூரம் வந்துள்ளார். அவருக்கு இன்று 25 வயது. இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்.. என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad