• சற்று முன்

    குப்பையில் இருந்து குழந்தையை மீட்டு திருப்பத்தூர் குழந்தைகள் காப்பகத்தில் போலீஸார் ஒப்படைப்பு


    ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே 10 மாத பெண் குழந்தை குப்பையில் வீசிய குழந்தையை மீட்டு திருப்பத்தூர் குழந்தைகள் காப்பகத்தில் போலீஸார் ஒப்படைப்பு
        
    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே இன்று விடியற்காலை 4 மணி அளவில் குப்பையில் குழந்தை அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.   அங்கு சென்று பார்த்தபோது 10 மாத பெண் குழந்தை குப்பைத் தொட்டியில்  இருந்தது ஜோலார்பேட்டை போலீசார் குழந்தையை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைக்குப்பின் பசுமை  நகரிலுள்ள srdps  பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். குழந்தைக்கு அனைத்து வகையான சோதனைகளும் செய்யப்பட்டு குழந்தையை குறித்து விளம்பரம் செய்யப்படும் உறவினர்கள் யாரும் வரவில்லை என்றால்  இரண்டு மூன்று மாதங்கள் கழித்து  குழந்தையை தொடர்ந்து காப்பகத்தில் பராமரிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி முன்னிலையில் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைக்கப்படும்  என்று கூறினர்.

    செய்தியாளர் - நித்தியானந்தம் - திருப்பத்தூர் 
    வீடியோ பதிவை nms today youtube - ல் பார்க்கவும் .subscribe செய்யவும் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad