காரைக்குடியில் முத்திரையால் இனமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
காரைக்குடி வட்டம்,அமராவதி புதூர் அருகே முத்தரையர் இனமக்களால் பராமரிக்கப்பட்டு வரும் ஶ்ரீ முனியைய்யா கோவிலை,கிராமத்திலுள்ள ஒரு தரப்பினர் தனிப்பட்ட பகையை கருத்தில் கொண்டு,இக்கோயிலை இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுக்க மனு கொடுத்துள்ளனர். வெட்டவெளி பொட்டலில்,எந்த கட்டிடமும் இ்ல்லாத மேற்படி கோயிலை அறநிலையத் துறையினரும் ஒருதலை பட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளனர். பூசாரியையும் மிரட்டியுள்ளனர்.இதனை கண்டித்து கிராம பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாநிலத் துணைச்செயலாளர் நா.சாத்தையா, ஏஐடியூசி மாநில துணைச் செயலாளர் பிஎல்.இராமச்சந்திரன்,ஏஆர்.சண்முகம்,இ்ந்திய கம்யூனிஸ்ட் ஏடி.ஆறுமுகம்,செஞ்சை ராஜகோபால்,அமராவதி புதூர் சின்ன ஆதியான்,முத்தையா,கார்த்தி மற்றும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் ஒருதலை பட்சமாக நடவடிக்கை எடுக்கும் அறநிலையத் துறை அதிகாரியின் செயலை கண்டித்தனர்
செய்தியாளர் : சண்முக சுந்தரம்
கருத்துகள் இல்லை