• சற்று முன்

    கார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா














    நேற்று  கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று காலை வெள்ளி விமானங்களிலும் இரவு மூஷிகம், மயில், வெள்ளி அதிகார நந்தி, ஹம்சம், சிம்ம வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதியில் வலம் வந்தனர். அப்போது பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபட்டனர்.விழாவின் முக்கிய நிகழ்வாக அண்ணாமலையார் கோயிலில் மூலவர் சந்நிதியில் வரும் 10-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணி அளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளன. மூஷிக வா
    கனத்தில் விநாயகரும் தங்க சூரியபிரபை வாகனத்தில் சந்திரசேகரரும் இன்று காலை மாட வீதியில் வலம் வந்தனர். பின்னர், வெள்ளி இந்திர விமானங்களில் இன்று இரவு பஞ்சமூர்த்திகள் பவனி வர உள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad