Header Ads

  • சற்று முன்

    திருப்பத்தூரில் பெண்கள் பாதுகாப்பிற்காக காவலன் செயலியை அமைச்சர் வீரமணி தொடங்கிவைத்தார


    திருப்பத்தூர் மாவட்டம் சமீபத்தில் தொடங்கி செயல்பட்டு வருகிறது. மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தற்காலிக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கான காவலன் செயலியை மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர். விஜயகுமார் தலைமையில் நடைப்பெற்றது. 

    இந்த நிகழ்ச்சியில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை  அமைச்சர் கே.சி. வீரமணி கலந்துக்கொண்டு காவலன் செயலி மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்கான செல்போன் எண்ணையும் அறிமுகம் செய்து  தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அமைச்சர் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடைப்பெற்று கொண்டிருக்கின்றது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக எந்த ஒரு குற்றச்சம்பவங்களும் நடைப்பெற கூடாது என்றும் பெண்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் எந்தவித அச்சமும் இன்றி காவலன் செயலி மூலமாகவும் செல்போனில் தொடர்புக்கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் பேசினார்.

     மேலும் இது குறித்து பள்ளி, கல்லூரி மட்டும் இன்றி பொதுமக்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்த படும் என்று பேசினார்.  இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் உட்பட ஏராளமான அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad