கோவில்பட்டியில் நேஷனல் பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோர் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி முகாம்; துவக்க விழா
கோவில்பட்டி, கே.ஆர்.நகர், நேஷனல் பொறியியல் கல்லூரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் இரண்டு வாரம் (02.12.2019 முதல் 14.12.2019 வரை) ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி முகாம,; இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் நிதி உதவியுடன் கல்லூரி வளாகத்தில் 02.12.2019 திங்கட்கிழமை தொடங்கபட்டது. இவ்விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் கே.காளிதாச முருகவேல் தலைமை வகித்தார்;.
முனைவர் தி.சக்தி, உதவி பேராசிரியர்ஃமனிதவளம் வரவேற்றார். முனைவர் இ.சங்கர், ஒருங்கிணைப்பாளர்ஃஇ.டி.செல், ஆசிரியர்களுக்கு இரண்டு வார நிகழ்ச்சி குறித்து விளக்கினார்.
இம்முகாமில் சிறப்பு விருந்தினர் முனைவர் வி.மோகன்ராம், பயிற்சி அதிகாரி, தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் (தமிழ்நாடு), மதுரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த இரண்டு வார பயிற்சி முகாமில் ஒருவர் தொழில் முனைவோராக மாறுவதற்கு தேவையான அனைத்து முக்கியமான மற்றும் தேவையான திறன்களும் விவாதிக்கப்பட்டு பேராசியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட இருக்கிறது. இப்பயிற்சிக்கு 20க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பல்வேறு கல்லூரிகளில் இருந்து கலந்துகொண்டனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் இயக்குனர் முனைவர்; எஸ்.சண்முகவேல், நேஷனல் பொறியியல் கல்லூரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர்கள்; சிறப்பாக செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை