திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா 5ஆம் நிகழ்வு
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 5-ம் நாள் உற்சவத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தின் மீது அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் மாடவீதிகளில் அருள் பாலித்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழா 5ம் நாளான நேற்றிரவு, உற்சவத்தில் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்திஅம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு திருக்கோவிலின் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் வலம்வந்த பஞ்சமூர்த்திகள் ராஜகோபுரம் முன்புள்ள 16 கால்மண்டபத்தில், வெள்ளி ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் எழுந்தருளினர். வெள்ளி ரிஷப வாகனத்தில் பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஷ்வரரும், வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர், வெள்ளி மயில் வாகனத்தில், முருகரும் எழுந்தருளி காட்சியளித்தனர். பஞ்சமூர்த்திகள் நான்கு மாட வீதிகளில் வலம்வந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
கருத்துகள் இல்லை