பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி
தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். இரண்டு கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2, 2020ல் நடக்கும். ஆனால் மாநகராட்சி, நகராட்சி தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படவில்லை. நிர்வாக காரணங்களுக்காக இந்த தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்னொரு பக்கம் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க கோரி திமுக சார்பில் வழக்கு தொடுத்துள்ளது.தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்யாமல் தேர்தல் நடத்த கூடாது.
வழக்கு
இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் தேர்தல் நடத்த கூடாது என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. இதில் தமிழக தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியது. அதன்படி மாவட்ட பிரிப்பிற்கு பின் தொகுதி வரையறை செய்யாமல் எப்படி உள்ளாட்சி தேர்தல் நடத்துவீர்கள் என்று கேட்டது.
தள்ளி வைக்க கோரிக்கை
இதற்கு அரசு தரப்பு அந்த 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளி வைக்கலாம். அதற்கு ஒப்புக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத திமுக தரப்பு மொத்தமாக தேர்தலை தள்ளி வைக்கக் வேண்டும். நகராட்சி தேர்தலோடு சேர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டது.
தீர்ப்பு
இந்த நிலையில் தமிழக புதிதாக உருவாக்கப்பட்ட மற்றும் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தலைமை நீதிபதி போப்டே, நீதிபதிகள் சூரிய காந்த், பூஷன் ராமகிருஷ்னன் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
கருத்துகள் இல்லை