• சற்று முன்

    திருப்பத்தூரில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பொது விவாதம் மேடை


    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தனியார் கல்லூரியில் மாவட்ட அளவிலான பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விவாதம் மற்றும் விழிப்புணர்வு விவாத மேடை நடைபெற்றது.தனியார் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விவாத மேடையில் சேஞ்ச் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் சரஸ்வதி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாக இயக்குனர் ராஜ கோபால் மற்றும் டாக்டர் சந்திரா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். வழக்கறிஞர் அமுதானந்தன் நன்றியுரையாற்றினார்.

    கூட்டத்தில் பேசிய சேஞ்ச் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் சரஸ்வதி

    இந்த நாட்டில் அதிக அளவில் பெண்களுக்கான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது இதற்கான புள்ளிவிவரங்களும் சரிவர அரசாங்கம் கூறுவதும் இல்லை பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்ட பகுதிகளில் அவரது பெற்றோர்கள் மற்றும் கிராம மக்களும் போதிய விழிப்புணர்வு இல்லாமல் வெளிக் கொண்டு வரவும் தயங்குகின்றனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் தற்போது சூழ்நிலையில் ஒரு குற்றவாளியாக கருதப்படுகின்றனர். தற்போது நடைமுறையிலுள்ள போக்சோ சட்டம் குற்றவாளிகள் மீது உடனடியாக பாய வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார் அது மட்டுமன்றி அயல் நாடுகளில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கிறது அது போல இந்திய நாட்டிலும் பின்பற்றவேண்டும் பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்படும் பெண்களுக்கு உதவித்தொகை உடனடியாகவும் கிடைக்க வேண்டும். இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி பேசினார்.

    எமது செய்தியாளர் : திருப்பத்தூர் : நித்தியானந்தம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad