திருப்பத்தூரில் அமமுக கட்சியின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் விழா
வேலூர் மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக பெய்த மழையில் பல பகுதிகளில் அச்சுறுத்தும் வகையில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக திருப்பத்தூரில் டெங்குவை ஒழிப்போம் என்ற கொள்கையோடு அமமுக கட்சியினர் வேன் மூலம் நிலவேம்பு கசாயத்தை வழங்கும் நோக்கில் மக்கள் நடமாட்டம் மிகுதியுள்ள இடங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனடிப்படையில் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கட்சியின் சார்பில் அட்சய முருகன் தலைமை வகித்தார். மற்றும் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஞனசேகர் கலந்துகொண்ட கழகத் தொண்டர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பொதுமக்களை வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கினார்.பூபதி, வானவராயன், மணிவண்ணன், அக்ரம், ரஞ்சித், பிரபு, சலிம் ஜோதி,சரவணன், சவுந்தரவள்ளி, சோனியா, ஆகிய நகர நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதில் அட்சயா முருகன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டெங்கு காய்ச்சலை எப்படி எதிர்கொள்வது என்றும் நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
எமது செய்தியாளர் : திருப்பத்தூர் : நித்தியானந்தம்
கருத்துகள் இல்லை