குப்பை சேகரிப்பு இடமாக மாறிவரும் கோவில் நிலம் - நடவடிக்கை எடுக்குமா நகராட்சி !
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகராட்சி 15 வது வார்டுக்கு உட்ப்பட்ட எம்ஜிஆர் நகரில், கோவிலுக்கு சொந்தமான நிலம் அமைந்துள்ளது, அதிக பரப்பளவில் மைதானம் போல் இருந்த நிலத்தில் சிறுவர்கள் விளையாட்டு திடலாக பயன்படுத்தி வரும் நிலையில், அப் பகுதியில் சிறுவர் பூங்கா இல்லாததாலும் இதனை உடற்பயிற்சி செய்யக்கூடிய முக்கிய பகுதியாக அனைவராலும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஓசூர் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் ஒருசில பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகளை இந்த இடத்தில் கொட்டி கிடங்காக வைத்து மீண்டும் மூன்று தினங்களுக்கு பிறகு குப்பையை அகற்றி செல்கின்றனர். அவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் துர்நாற்றம் வீசியும், அப்பகுதில் உள்ள கால்நடைகள் குப்பைகளில் உள்ள கழிவுகளையும் மற்றும் பிளாஸ்டிக் பேப்பர்களை தெரியாமல் மேய்ந்து ஆபத்தான ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுகின்றன .
மைதனாமாக விளங்கி வந்த கோவில் நிலம் தற்போது சுகாதார சீர்க்கேட்டில், நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் மேலும் அப்பகுதியை கடக்கும் பொதுமக்கள் மூக்கினை பிடித்து கொண்டு கடக்க வேண்டியதாகவும் எம்ஜிஆர் நகர் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர், நகராட்சி நிர்வாகம் உடநடியாக குப்பைகளை குடியிருப்புக்களுக்கு அருகில் கொட்டாமல் வேறு பகுதிகளில் கொட்டி, சிறுவர்கள் விளையாடி வந்த நிலத்தை சுத்தப்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
செய்தியாளர் :கிருஷ்ணகிரி - சி.முருகன்
கருத்துகள் இல்லை