ஓசூர் காவல்துறையினரின் எச்சரிக்கையை மீறி தென்பெண்ணை ஆற்றில் ஆபத்தான குளியலிடும் பெண்கள்,சிறுப்பிள்ளைகள்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து அதிகப்படியான நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது,கடந்த 15 நாட்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர்நிலைகளில் மூழ்கி சிறுவர்,பெரியவர் என 20 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் நீர்நிலைகளின் அருகில் விளையாட வேண்டாமென கேட்டுக்கொண்டுள்ளார் கெலவரப்பள்ளி அணையிலிருந்து இன்று 1120 கனஅடிநீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணை பாயும் மோரனப்பள்ளி, பேரண்டப்பள்ளி, கோப்பச்சந்திரம் ,பாத்தக்கோட்டா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, மேலும் தென்பெண்ணை ஆற்றினை ஒட்டியுள்ள கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வருவாய்த்துறையினர் தண்டோரா மூலம் எச்சரித்தும், காவல்துறையினர் நீர்நிலைகளின் அருகில் குளிக்கவோ, இறங்கவோ வேண்டாமென எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எச்சரிக்கையும் மீறி பாத்தக்கோட்டா தரைப்பாலத்தில் மீது அதிகரித்து செல்லும் நீரை பார்வையிட வரும் சிறுவர்கள்,பெண்கள் ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி ஆனந்த குளியலிட்டு வருகின்றனர், வாகன ஓட்டிகளும் தங்களுடைய வாகனங்களை கழுவுவதற்காக ஆற்றில் இறங்குவதும், இளைஞர்கள் செல்பியும் எடுத்து வருகின்றனர்
கருத்துகள் இல்லை