கோவில்பட்டியில் சைமன் (சீமான் ) கைது செய்ய கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியை அவதூறாக பேசிய சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும். பிரபாகரன் படத்தை இந்தியாவில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் காங்., சார்பில், இ.எஸ்.ஐ. மருந்தகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சண்முகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர்கள் வக்கீல் அய்யலுசாமி, திருப்பதி ராஜா, மாவட்ட முன்னாள் தலைவர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் சீமானை கண்டித்து பேசினார். தொடர்ந்துமாநில பொதுக்குழு உறுப்பினர் பொன்னுச்சாமி பாண்டியன், வட்டார தலைவர் ரமேஷ் மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோசமிட்டனர்.
செய்தியாளர் : கோவில்பட்டி ; சிவராமலிங்கம்
கருத்துகள் இல்லை