• சற்று முன்

    திருப்பத்தூர் அருகே அரசு பேருந்து சிறை பிடிப்பு


    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பொம்மிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏழருவி கிராமத்தில் பணங்குட்டை ஏரியின் அருகில் அரசு சொந்தமான 3 ஏக்கர் நிலப்பரப்பில் கிராம நத்தம் புறம்போக்கு இடம் உள்ளது  அந்த இடத்தில் அப்பகுதியை சேர்ந்த  50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஓலை குடிசை அமைத்து உள்ளனர்  இதனால் பொம்மிகுப்பம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அந்த இடத்தில் ஏழை எளிய தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே வீட்டுமனை பட்டா வழங்க கோரி திருப்பத்தூரிலிருந்து ஏழருவி வரை செல்லும் அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து விரைந்து சென்ற திருப்பத்தூர் கிராமிய காவல்துறை ஆய்வாளர் மதனலோகன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததின் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad