Header Ads

  • சற்று முன்

    ஆதனூ பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் நூதன போராட்டம்


    ஆரணி அருகே பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து உற்பத்தி செய்த பாலை கொள்முதல் செய்ய மறுத்த ஆதனூர் பால்  உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை கண்டித்து 300க்கும் மேற்பட்;ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றுகூடி 1000 லிட்டர் உற்பத்தி பாலை தரையில் கீழே கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஆதனுர் கிராமத்தில் கடந்த 30 -ஆண்டுகளுக்கும் மேலாக ஆதனூ பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகின்றது. இந்த சங்கத்தில் ஆதனுர், கீழையூர், விருபாட்சிபுரம், உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆதனூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் இரண்டு வேளையும் சுமார் 400  உறுப்பினர்களிடமிருந்து தினமும் சுமார்  3000 லிட்டர் வரையில் உற்பத்தி செய்த பாலை கொள்முதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1மாத காலமாக ஆதனுர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உற்பதி செய்த பாலை முழுமையாக  கொள்முதல் செய்யாமல் 70 சதவீத பாலை மட்டும் கொள்முதல் செய்துகொண்டு மீதம் உள்ள பாலை திருப்பி கொடுத்து விடுவதால்  உற்பத்தியாளர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.


    எமது செய்தியாளர் : மூர்த்தி 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad