டெங்கு காய்ச்சலை ஒழிக்க உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவி வரும் டெங்குகாய்ச்சளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பொது மக்கள் பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் இதில் சிகிச்சை பலனின்றி சிலர் உயிரிழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது. பொது மக்களிடம் கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்தி டெங்கு கொசுவை ஒழிக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது. மேலும் : டெங்கு காய்ச்சளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் மெனவும் டெங்கு காய்ச்சல் பரவாமல் மக்களை பாதுகாக்க தமிழக அரசு சிறப்பு கவணம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை