அண்ணாமலையார் திருக்கோயில் வளாகத்தில் குரங்குகள் அட்டகாசம், பக்தர்கள் அச்சம்.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் தினசரி குரங்குகள் அட்டகாசம் அதிகமாகி கொண்டே வருகிறது. இதனை கோயில் நிர்வாகம் ஏனோ கண்டுகொள்ளாமல் இருக்கிறது. குரங்குகள் கடித்து ஏற்கனவே ஒரு சில பக்தர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே மீண்டும் குரங்குள் எந்தப் பக்தரையும் கடிக்காமல், குரங்குகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கார்த்திகை தீபம் நெருங்கி வரும் வேளையில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து இருப்பது பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எமது செய்தியாளர் : மூர்த்தி
கருத்துகள் இல்லை