ஆர்எஸ் மங்கலம் அருகே கருப்பக் குடும்பன்பச்சேரி கிராமத்தில் கூலி தொழிலாளி வீடு எறிந்ததில் தீக்கிரையானதில் பாத்திரம் எறிந்தது
ஆர்எஸ் மங்கலம் தாலுகா தாலுகா, ஆர்எஸ் மங்கலம் அருகே கருப்பக் குடும்பன்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த வளர்மதி (50) இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார் . வழக்கம் போல் இன்று வயலுக்கு களை பறிக்க சென்றிருந்த நிலையில் சுமார் 12 மணி அளவில் மின் கசிவு ஏற்பட்டு வீடு தீப்பற்றி மளமளவென எரிந்தது. உடன் ஆர்எஸ்மங்கலம் தீயணைப்பு நிலைய தகவல் கொடுக்கப்பட்டு அதன் பேரில் வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருந்தும் வீட்டிலிருந்த ரேஷன் கார்டு, பாத்திரங்கள் அரசு ஆவணங்கள் மற்றும் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியது வீடு தீப்பற்றி எரிவதற்கு முன் சில மணி நேரம் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது . வீடு தீப்பற்றியதற்கு மின்கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற கோணத்தில் ஆர்எஸ்மங்கலம் காவல் நிலையத்தில் விசாரித்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை