• சற்று முன்

    திருவாடானை அருகே பாரதிநகரில் மழை நீர் தேக்கத்தால் தொற்றுநோய் பரவும் அபாயம் மக்கள் பீதி - சுகாதார துறை நடவடிக்கை எடுக்குமா ?


    திருவாடானை அருகே பாரதி நகரில் மழை நீர் செல்லும் வாய்காலை ஆக்கிரமித்து அடைத்து வைத்திருப்பதால் பொதுமக்கள் அவதி, நோய் பரவி விடுமோ என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    ராமநாதபுரதம் மாவட்டம், திருவாடானை தாலுகா, கல்லூர் பஞ்சாயத்திற்குட்பட்ட பாரதிநகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார். இங்கு நேற்றும் அதற்கு முன்பும் பெய்த சிறு மழைக்கே மழை நீர் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. அதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. பாரதி நகரின் முன்பகுதியில் மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையின் வடக்குபுறம் ஆதிபரா சக்தி கோவில் அருகில் இருந்து சூச்சனி கண்மாய் வரைக்கும் வாயக்கால் இருந்தது. நாளடைவில் சாலை விரிவாக்கம் செய்து உயர்த்தி விட்டதாலும், ஆங்காங்கே தங்களது வீடுகளுக்கு முன்புறத்தில் ஆக்கிரமித்து வாய்காலை அடைத்து விட்டதால் மழைநீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வீட்டிற்குள் மழை நீர்  சென்றுவிடுகிறது. 

    குறிப்பாக பாரதிநகர் 4,5,6வது வீதிகளில் மழை நீர் அதிக அளவில் தேங்கி கிடக்கிறது. மேலும் மழை நீர் தேங்குவதால் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தி ஆகி இரவு மட்டுமல்லாத பகலிலும் கடிக்கிறது. அதனால் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவி விடுமோ என்ற அச்சத்தில் உறைந்துள்ளதாக தெரிவித்தார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஆக்கரமித்துள்ள வாய்காலை தூர்வாரி மக்களை சுகாதாரக் கேட்டில் இருந்து பாதுகாக்க நடவட்டிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்கள்.


    செய்தியாளர் : திருவாடானை - ஆனந் 



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad