Header Ads

  • சற்று முன்

    திருவாடானை அருகே ஓரியூரில் டெங்கு காய்ச்சல் குறித்து மாணவர்கள் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்


    திருவாடானை அருகே ஓரியூரில் மாணவ மாணவிள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஓரியூரில் புனித அருளானந்தர் மேல்நிலைப் பள்ளி உள்ளது இங்கு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியில் செயல்பட்டுவரும் தேசிய மாணவர்படை மற்றும் இளம் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட சைக்கிள் பேரணி நடபெற்றது. இந்த பேரணியில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும், சுற்றுப்புற தூய்மை மற்றும் தூய்மை இந்தியா ஆகியவற்றை வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை பள்ளி தாளாளர் மைக்கேல் கொடி அசைத்து துவக்கி வைத்தார். 

    பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்டின்துரை தலைமையில் நடைபெற்ற சைக்கிள் பேரணியானது ஓரியர் பள்ளியில் இருந்து துவங்கி கோட்டை நகர், வெள்ளையபுரம், புலியூர், கட்டிவயல் வழியாக சென்று நிலமழகியமங்கலத்தில் நிறைவுபெற்றது. இந்த பேரணியில் மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது பற்றியும், நாம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள ஏதுவாக பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் மற்றும் தூய்மை இந்தியா இயக்கம் பற்றிய வாசகங்கள் அடங்கிய பதாதைகளை சைக்கிளில் ஏந்தி கோசங்கள் எழுப்பியவாறு சென்றனர். மேலும் விழிப்புணர்வு பற்றிய  துண்டு பிரசுரங்கள் மக்களிடம் விநியோகம் செய்யப்பட்டது. பேரணியின் ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அதிகாரி குழந்தைராஜ், இளம் செஞசிலுவைச் சங்க கவுன்சிலர் ஜேசுராஜா, உடற்கல்வி ஆசிரியர் ஆரோக்கியம் ஆகியோர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad