சேத்துப்பட்டு காயிதேமில்லத் தெருவில் தரை பாலம் சேதம் அடைந்துள்ளது - உயிரிழப்பு ஏற்படுமுன் பேரூராட்சி நிர்வாகம் சரி செய்திடுமா ?
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட காயிதேமில்லத் தெரு அமைந்துள்ளது. இந்த தெருவின் மத்தியில் உள்ள சிறுபாலம் சேதமடைந்து உட்புறமாக விழுந்து தெருவின் குறுக்கே திடீர்பள்ளம் உருவாகியுள்ளது. இந்த பள்ளம் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பேரூராட்சி நிர்வாகம் சரிசெய்யாமல் அவலநிலை நீடித்து வருகிறது. காயிதேமில்லத் தெருவிற்கு அருகே 200 மீட்டர் தொலைவில் சேத்துப்பட்டு அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசினர் மாணவியர் விடுதி, ஆசிரியர் பயிற்றுனர் அலுவலகம் உள்ளிட்டவைகள் செயல்படும் இந்த பகுதியில் பள்ளி மற்றும் விடுதிக்கு சைக்கிளில் மற்றும் நடந்து செல்லும் மாணவ மாணவிகள், இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் முதியவர்கள் பெண்கள் குழந்தைகள் இந்த தெருவின் வழியாக செல்லும்போது பள்ளத்தில் விழுந்து அடிக்கடி விபத்து ஏற்பட்டு கை, கால் முறிவு காயம் ஏற்பட்டு வருகிறது. மேலும் அவசரத்திற்கு 108 ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வரமுடியாத சூழல் உள்ளது. மழைக் வெள்ளம் காலங்களில் குழந்தைகள், மாணவ, மாணவிகள், முதியவர்கள், பள்ளத்தில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. தெருவின் சிறுபாலத்தை உடனடியாக சரிசெய்து தரக்கோரி சிறப்புநிலை பேரூராட்சியிடம் பலமுறை மனுகொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றன.
செய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி
கருத்துகள் இல்லை